அயோத்தி தீர்ப்பு; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அயோத்தி தீர்ப்பு; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ஒசூர்:

அயோத்தி வழக்கு இன்று தீர்ப்பு வெளியாவதை அடுத்து, ஓசூர் பகுதிகளில் பெரும்பாலான அரசு தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தமிழக மாநில எல்லையாக அமைந்திருப்பதால், அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாலும் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு காரணமாக பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் 17ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பணிஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று 9 காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் போலிசார் விடுப்பு எடுக்க வேண்டாமென தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்

தமிழக – கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்