வீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஒசூர்:

ஓசூர் மாநகராட்சியில் வீடற்றவர்களுக்கு வீடு, அரசு நிலத்தில் உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தமிழகத்தில் 12 வது புதிய மாநகராட்சியாக உதயமாகி உள்ளது. ஓசூரில் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகளை கட்டி வசித்துவருவதால் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் நிலமற்றவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள 3 செண்ட் நிலம் வழங்க வேண்டுமென்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தளி முன்னாள் எம்எல்ஏ இராமச்சந்திரன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான மனுக்களுடன் வட்டாட்சியரை சந்தித்து அளித்தனர், அதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தநிலையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்