ஒசூரில் கம்யூ., போராட்டம்

ஒசூரில் கம்யூ., போராட்டம்

ஒசூர்:

வீட்டுமனை பட்டா வழங்ககோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாச்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
.

ஒசூர் அருகே வீட்டுமனை பட்டா மற்றும் சாகுபடி புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் போன்ற பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், சாகுபடி மற்றும் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாச்சியர் அவலுலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக தாலுக்கா அலுவலகம் முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தேன்கனிகோட்டை சுற்றுப்புறப்பகுதிகளில் வீடுகட்டி குடியிருக்கும் வீட்டுமனை பட்டா இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை பட்டாவழங்க வேண்டும், வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடுகட்ட 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும், பல வருடங்களாக சாகுபடி செய்யும் விவசாய புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நிபந்தனையின்றி முதியோர் உதவித்தொகை வழங்கவேண்டும், அதேபோல முதியோர் உதவிதொகை வழங்கி நிறுத்தப்பட்டவர்களுக்கும் மீண்டும் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வட்டாச்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாச்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து வட்டாச்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து அறிந்த தேன்கனிகோட்டை வட்டாச்சியர் பாலசுந்தரம் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் சமாதானப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரிடமும் பட்டா குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்