அதிமுக கவுன்சிலர்களை திமுக இழுக்க முயற்சி

அதிமுக கவுன்சிலர்களை திமுக இழுக்க முயற்சி

ஒசூர்:

ஒசூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற அதிமுக கூட்டணி கவுன்சிலர்களை திமுகவினர் இழுக்க முயற்சி செய்துள்ளது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்கட்டமாக உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 அன்று பதிவாகி ஜனவரி 2ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஒசூர் ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் அதிமுக 8 வார்டுகளை தனியாகவும் கூட்டணி கட்சியான தேமுதிக 1 இடத்திலும் வெற்றி பெற்றது சுயேச்சை ஒரு இடத்திலும் திமுக 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றது

அதிமுக+ கூட்டணி கட்சியுடன் சேர்ந்து ஒசூர் ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளநிலையில், ஒன்றிய குழு தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள இருக்கிறது அதற்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 அன்று நடைப்பெற உள்ளநிலையில்,

ஒசூர் ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் வெற்றி பெற்ற 16 கவுன்சிலர்களும் ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் ஆப்தாப் பேகம் முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.

திமுக 6 சுயேச்சை 1 உட்பட 7 கவுன்சிலர்களை பெற்றுள்ள நிலையில், ஒன்றிய குழு தலைவராக 2 கவுன்சிலர்கள் திமுகவிற்கு தேவை.

அதிமுக சார்பில் வெற்றிப்பெற்ற முரளி என்பவரையும், தேமுதிக சார்பில் வெற்றி பெற்றுள்ள உமா என்பவரின் ஆதரவை பெற திமுக கடும் முயற்சித்து வருகிறது, பதவியேற்றுக்கொண்டு வெளியே வந்த அதிமுக வேட்பாளரிடம் திமுக அவர்களின் உறவினர்களை அழைத்து வந்து கூட்டி செல்ல முயன்றதால் அதிமுக – திமுகவினரிடையே மோதல் போக்கு உருவானது

போலிசார் குறுக்கிட்ட பின்பாக அதிமுக தேமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த 9 கவுன்சிலர்களும் வேனில் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்