உள்ளாட்சி தேர்தல்: அதிகாரி விசித்திர பதில்

உள்ளாட்சி தேர்தல்: அதிகாரி விசித்திர பதில்

ஒசூர்:

ஓசூர் அருகே, பழங்குடியின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தேர்தலில் பிற்ப்படுத்தப்பட்ட சமூகத்தினரும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் ஜாதி சான்றிதழ் இல்லாமலே போட்டியிடலாம் என அதிகாரி பதிலளித்துள்ளது விசித்திரமாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி ஒன்றியத்தில் உள்ள 50 சிற்றூராட்சிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 27 அன்று நடைப்பெற உள்ளது.

தளி ஊராட்சி ஒன்றியத்தில் பாளையங்கோட்டை ஊராட்சி 3200 வாக்காளர்கள் உள்ளநிலையில், பழங்குடியின பெண்கள் போட்டியிட மாநில தேர்தல் ஆணையம் இட ஒதுக்கீட்டினை வழங்கி உள்ளது.

பாளையங்கோட்டை ஊராட்சியில் ஒரே ஒரு பழங்குடியின குடும்பம் மட்டுமே உள்ளநிலையில் புட்டமாதம்மா என்பவர் ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார்.

அவரை எதிர்த்து அதே ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டு சமூகத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி புஷ்பாவதி மற்றும் பிரேமாவதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான ஆய்வில், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த புட்டமாதம்மா பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் அலுவலரிடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேட்புமனு மீது பழங்குடியின சமூகத்தினரா என உறுதி செய்து, வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என கூறி மூவரின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து பாளையங்கோட்டை ஊராட்சி, தேக்கூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் அளித்த பேட்டியில்:

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட உள்ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர், தகுதியில்லாதவர்களின் வேட்புமனுவினை நிராகரிக்காத அதிகாரி, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், பணம் பலம் படைத்தவர்கள் எந்த தொகுதியிலும் போட்டியிடலாம் என்கிற நிலை நிலவி வரும்நிலையில், இட ஒதுக்கீட்டை ரத்து செய்து பொதுதொகுதியாக அறிவித்து விடலாமே, தமிழகத்தில் இதுப்போன்ற முறைக்கேடுகள் நடந்துவருகின்றன. பாளையங்கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களின் வேட்புமனுக்களை மறு ஆய்வு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்