ஒசூர் எல்லையில் போலீசார் சோதனை

ஒசூர் எல்லையில் போலீசார் சோதனை

ஒசூர்:

தமிழகத்தில் கிராம புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நெருங்க உள்ளநிலையில், மாநில எல்லைகளில் ஒசூர் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் என்பது தமிழகத்தின் மாநில எல்லையாக உள்ளது. கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி வழியாகவும் கக்கனூர்,கொத்தகொண்டப்பள்ளி,பூனப்பள்ளி ஆகிய வழியாகவும் தமிழகத்திற்கு போக்குவரத்து சாலைகள் அமைந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள கிராமபுறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைப்பெற உள்ளது.

தேர்தலில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் மதுப்பாட்டில்கள், பரிசுப்பொருட்பள், பணம் உள்ளிட்டவைகளை வழங்குவதற்காக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த வாய்ப்பிருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் அவர்களின் உத்தரவின் பேரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களை தமிழக,கர்நாடக மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள ஜூஜூவாடி,பூனப்பள்ளி,கக்கனூர் ஆகிய சோதனை சாவடிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஒசூர் துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான 50க்கும் மேற்ப்பட்ட போலிசார். அரசுப்பேருந்துக்கள், தனியார் பேருந்துக்கள்,லாரி,இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர்.

இன்று முதல் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை வாகன தணிக்கையை அதிகரிக்க இருப்பதாகவும், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பரிசுப்பொருட்கள் உட்பட மதுப்பாட்டில்களை கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்