6 நாட்களில் மருத்துவமனை

  • In General
  • January 24, 2020
  • 208 Views
6 நாட்களில் மருத்துவமனை

வுஹான்:

சீனாவில் பரவி கொரோனா வைரசால் இடப்பற்றாக்குறை காரணமாக 6 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி முடிக்க அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து சீனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவில் தற்போது பரவிவுள்ள ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலால் ஒரு நகரத்தையே சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பு பல்வேறு இடங்களில் பரவி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் சுமார் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போதிய இடமின்றி மருத்துவமனைகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், 6 நாட்களில் பிரத்யேக மருத்துவமனையை கட்டி முடிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. வுஹான் நகரில் கட்டப்படும் இந்த மருத்துவமனை பிப்ரவரி 3ம் தேதிக்குள் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனை 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகள் கொண்டதாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்