10 நாளில் மருத்துவமனை ‘ரெடி’

  • In General
  • February 3, 2020
  • 211 Views
10 நாளில் மருத்துவமனை ‘ரெடி’

வுஹான்:

சீனாவில் பரவி கொரோனா வைரசால் இடப்பற்றாக்குறை காரணமாக 10 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி முடித்து சீனா சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சீனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவில் தற்போது பரவிவுள்ள ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலால் ஒரு நகரத்தையே சீல் வைக்கப்பட் டுள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பு பல்வேறு இடங்களில் பரவி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போதிய இடமின்றி மருத்துவமனைகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், 10 நாட்களில் பிரத்யேக மருத்துவமனையை கட்டி முடிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. வுஹான் நகரில் கட்டிட வேலையை கடந்த 21ம் தேதி தொடங்கியது. இந்த மருத்துவமனை பிப்ரவரி 3ம் தேதிக்குள் (இன்று) பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த மருத்துவமனை 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகள் கொண்ட 419 வார்டுகளுடன் கூடிய இந்த அதிநவீன மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. 30 அவசர சிகிச்சை பிரிவுகளும் இங்கு உள்ளன.

இதனைத்தொடர்ந்து, இன்று முதல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் எனவும் சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 1,400 பணியாளர்களுடன் ஏராளமான மருத்துவர்களும் இந்த மருத்துவமனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்