கிராம வீடுகளில் காய்கறி.. ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு!

கிராம வீடுகளில் காய்கறி.. ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை:

தமிழக கிராமங்களின் வீடுகளில் காய்கறி உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு ரூ.3 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில வசிக்கும் மக்கள், வீடு அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த ‘முதல்வர் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தை ரூ.3 கோடியில் செயல்படுத்துவதற்கான மதிப்ட்டை தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை இயக்குனர் அளித்தார். இதன் அடிப்படையில், ரூ.3 கோடி நிதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும், தோட்டக்கலை துறை சார்பில் 100 காய்கறிகளின் விதைகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் 4,37,440 மெட்ரிக் டன் காய்கறி உற்பத்தி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்