‘‘இந்தி கற்பது கட்டாயம் அல்ல’’ திருத்திய வரைவு மத்திய அரசு தாக்கல்!

‘‘இந்தி கற்பது கட்டாயம் அல்ல’’ திருத்திய வரைவு மத்திய அரசு தாக்கல்!

புதுடெல்லி:

தமிழகம் உள்ளிட்ட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பது கட்டாயம் அல்ல என மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான திருத்தப்பட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் தேசிய கல்விக் கொள்கை பரிந்துரையின் அடிப்படையில், வரைவு அறிக்கையாக மத்திய அரசு வெளியிட்டது.

484 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கையில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் 8ம் வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கல்விக்கொள்கையின் பரிந்துரைகளான மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பது கட்டாயம் அல்ல என மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான திருத்தப்பட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்தது. இதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்