மிக உயரமான கிரிக்கெட் வீரர்

மிக உயரமான கிரிக்கெட் வீரர்

உலகில் மிக உயரமான வேகப்பந்துவீச்சாளர் என்ற பெயரை, பாகிஸ்தானை சேர்ந்த முத்தாஷீர் குஜ்ஜார் என்ற 21 வயதே ஆன இளம்வீரர் பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தாஷீர் குஜ்ஜார். இவருடைய தந்தை ஆஷிம் முகமது என்பவரின் உயரம் 5.6 அடி, தாயார் பர்வின் 5.3 அடி. இந்நிலையில், குஜ்ஜார் பள்ளி பருவத்திலேயே மிகவும் உயரமான மாணவராக இருந்தார். மகனின் அபரிவிதமான வளர்ச்சியை கண்டு பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கும் மகனை அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். ஹார்மோன்ஸ் காரணமாக குஜ்ஜார் வளர்ந்துகொண்டே இருப்பதாகவும், கடந்த முறை பார்த்தபோது 7 அடியாக இருந்த அவன் தற்போது, 7.6 அடியாக வளர்ந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். குஜ்ஜார், மிக உயரமாக இருப்பதால் பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்வதற்கு சிரமப்பட்டுவருகிறார்.மேலும் அவரின் பாதங்களும் பெரியதாக இருப்பதால் ஷூக்களும் கிடைக்கவிலை. அவருக்கு ஏற்ற உடைகளும் கிடைப்பதில்லை என்பதால் பெற்றோர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

இதையடுத்து, தனது உயரம் குறித்து கூறிய குஜ்ஜார், என்னுடைய உயரத்தை பற்றி நான் கவலை படுவதில்லை. எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்கிறேன். தற்போது என்னுடைய அதிக உயரம் தான் கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெயர் கிடைத்துள்ளது என்று கூறினார்.

மேலும், ‘நான் ஒரு பந்து வீச்சாளராக ஆக ஏழு மாதங்களுக்கு முன்பு பயிற்சி தொடங்கினேன், ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக, பயிற்சியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் நான் உலகின் மிக உயரமான பந்து வீச்சாளராக இருப்பேன் என்று நம்புகிறேன் என்றும் குஜ்ஜார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்