தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்கு சதவீதம்; தேர்தல் ஆணையம் தகவல்

தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்கு சதவீதம்; தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி:

மக்களவைத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் மட்டும்தான் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 66.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், தற்போது 542 தொகுதிகளில் தேர்தல் நடந்து 0.71 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில், அதிகபட்சமாக லட்சத்தீவில் 85 சதவீதமும், குறைந்தபட்சமாக காஷ்மீரில் 29.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்