மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது

  • In Chennai
  • September 17, 2019
  • 182 Views
மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது

சென்னை:

சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுபடி ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேறு கட்சியை சேர்ந்த 4 பேர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுபடி ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உறுப்பினராக இல்லாதவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்