தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:

தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்