மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.30 லட்சம் கன அடியாக உயரும் என்று கூறப்படுகிறது.

கர்நாடகாவில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று இரவே அணையின் நீர்மட்டம் 71 அடியை தொட்டுவிட்டது.

வெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.30 லட்சம் கன அடியாக உயரும் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1.53 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்