வனப்பகுதியில் வீசிச்சென்ற நாட்டுத் துப்பாக்கிகள்..!

வனப்பகுதியில் வீசிச்சென்ற நாட்டுத் துப்பாக்கிகள்..!

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை, காப்புக்காடு பகுதியில் 5 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவில் நாட்டு துப்பாக்கிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏரியூர் வனப் பகுதியில் மர்ம நபர்கள் 5 நாட்டு துப்பாக்கிகளை வீசிச் சென்றுள்ளனர். நாட்டு துப்பாக்கிகளை வீசிச்சென்ற மர்ம நபர்கள் யார் என்கிற ரீதியில் ஏரியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்