57% பேருக்கு நிரந்தர குடியுரிமை..! டிரம்ப் அறிவிப்பு..!!

57% பேருக்கு நிரந்தர குடியுரிமை..! டிரம்ப் அறிவிப்பு..!!

வாஷிங்டன்:

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை முறையயில் மாற்றம் கொண்டுவந்து, 57 சதவீத வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசித்துவரும் சுமார் 11 லட்சம் பேருக்கு குடியுரிமையை அந்நாட்டு அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. நெருங்கிய குடும்ப உறவினர்கள் அடிப்படையில் 66 சதவீதமும், திறமை அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்த முறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. வேலை மற்றும் திறமையின் அடிப்படையில் 57 சதவீதம் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டுக்கு பதிலாக அªமெரிக்காவை கட்டமைக்கும் குடியுரிமையை வழங்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே 12 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்