இண்டூரில் கால்நடைகளுக்கு இலவச தாது உப்பு

இண்டூரில் கால்நடைகளுக்கு இலவச தாது உப்பு

இண்டூர்:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் உட்பட்ட இண்டூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நத்த அள்ளி மற்றும் தளவாய் அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு MSDA 2018-19 ஆண்டு திட்டத்தின் மூலமாக தாது உப்பு கலவை ஓர் விவசாயிகளுக்கும் 14 கிலோ என்ற அளவில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது கால்நடை மருத்துவர் கே.தசரதன் விவசாயிகளுக்கு இலவச உப்பு கலவையை வழங்கினார்.

இந்த உப்பு பயன்பாடு குறித்து கால்நடை மருத்துவர் கூறியதாவது: இந்தத் தாது உப்பு கலவை கால்நடைகளுக்கு அளிப்பதால் கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் பால் உற்பத்தி திறன் அதிகமாகும்.

கூடுதலாகவும் சினை பிடிக்கும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கூடுதலாகவும் இருக்கும்.
இந்த தாது உப்பு கலவை தினந்தோறும் காலை அல்லது மாலை வேளைகளில் 30 முதல் 40 கிராம் வரையிலும் கொடுக்கலாம்.

இப்படி வழங்கப்படும் கால்நடைகளின் பால் கூடுதலாகவும் மற்றும் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் SNF கூடுதலாக கிடைப்பதால் ஏழை, எளிய கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பாலின் விலை சற்று கூடுதலாக கிடைக்கும்.

துணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை தர்மபுரி கோட்டம் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் கால்நடை மருந்தகம் இண்டூர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்