கவர்னர் ஒப்புதல் தந்தவுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அமல்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கவர்னர் ஒப்புதல் தந்தவுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அமல்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குனர் செந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:சென்னையில் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் தான் இருக்கிறது. தமிழகம் முழுவதுமே 46,000 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 10% பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தருவதாக கூறியுள்ளார்.இந்த ஆண்டே அமல்படுத்த முடியுமா என்பது கவர்னரிடம் ஒப்புதல் பெறப்படும் கால அளவைப் பொறுத்து செய்ய முடியும். கொரோனா காலத்தில் 1,77,500யூனிட் ரத்தம் பெறப்பட்டு, 1,74,000 யூனிட் ரத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்