முத்துலட்சுமி ரெட்டிக்கு டூடுள் மூலம் கூகுள் கவுரவிப்பு

முத்துலட்சுமி ரெட்டிக்கு டூடுள் மூலம் கூகுள் கவுரவிப்பு

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு டூடுள் வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரவித்துள்ளது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி, தமிழகத்தில் பிறந்தவர். பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு குரல் கொடுத்தவர். மேயர் மற்றும் சட்டசபை துணைத்தலைவர் உள்ளிட்ட பதவியில் இருந்தவர். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்டவற்றுக்கு பாடுபட்டவர்.

மேலும் சென்னை அடையாறில் முதல் புற்றுநோய் மையத்தை அமைத்தவர். டாக்டர் முத்துலட்சுமியை கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்தநாளான இன்று கூடுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுள் வெளியிட்டு கவுரப்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்