இந்தியாவுடன் மிக நல்ல உறவு

  • In General
  • November 9, 2019
  • 197 Views
இந்தியாவுடன் மிக நல்ல உறவு

வாஷிங்டன்:

அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான உறவு மிகவும் நன்றாக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவுடன் எங்களுக்கு நிறைய விஷயங்கள் நடக்கின்றன. இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது என தெரிவித்தார்.

மேலும், இருநாட்டு வர்த்தகம் குறித்த கேள்விக்கு, நாங்கள் இந்தியாவுடன் பலவிதமான விஷயங்களை கையாண்டு வருகிறோம் என டிரம்ப் பதிலளித்தார்.

இந்தியாவுக்கு வருகை தரும் அவரது திட்டங்கள் குறித்து கேட்டதற்கு, நான் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்குச் செல்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்