ரூ.11.8 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.11.8 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.8 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்க ஆணையாளர் கூறுகையில், ரியாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஹரித்வாரைச் சேர்ந்த ஒரு பயணி தமீர், தங்கத்தை எடுத்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரது பொருட்களை பரிசோதித்தபோது, 300 கிராம் எடையுள்ள ரூ. 11.8 லட்சம் மதிப்பு 3 தங்கக் பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தமீரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்