சென்னையில் சவரனுக்கு 56ரூபாய் உயர்வு

சென்னையில் சவரனுக்கு 56ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 56 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (ஜூன் 9) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,435 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,428 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்துள்ளது.அதேபோல, நேற்று 35,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 56 ரூபாய் உயர்ந்து 35,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.47.41 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.47.44 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 47,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்