தங்கம் விலை ரூ.344 குறைந்தது

தங்கம் விலை ரூ.344 குறைந்தது

சென்னை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து விற்பனையானது.

கடந்த மாதம் சவரன் ரூ.30 ஆயிரத்தை தொட்ட 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.28,360க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.43 குறைந்து ரூ.3,545க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.47.40க்கு விற்பனையானது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்