தங்கம் தருவதாக மோசடி; 6 பேர் கைது

தங்கம் தருவதாக மோசடி; 6 பேர் கைது

ஒசூர்:

ஒசூர் அருகே குறைந்த விலைக்கு தங்கம் வழங்குவதாக கூறி விளம்பரம் செய்து பணத்துடன் வருபவர்களை நம்பிக்கை மோசடி செய்த பலே கூட்டாடிகள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை காவல்நிலையத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக தான் ஏமாற்றப்பட்டதாக புகாரளித்திருந்தார்.

அந்த புகாரில், பிரகாஷ் என்பவர் முகநூலில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகவும் அதனை வாங்கி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் என விளம்பரப்படுத்தியிருந்ததை நம்பி

பிரகாஷ் என்பவருக்கு தொடர்புக்கொண்டபோது கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பேரிகை பகுதிக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.

தங்கம் விற்பதாக கூறிய வியாபாரியிடம் விலை பேசி வந்தபோது, சைரன் வைத்த காரில் காக்கி உடையில் போலிசார் போல வந்ததாகவும் இதுக்குறித்து விசாரிக்க வேண்டுமென சுரேஷ்குமார் மற்றும் அவரின் கார் ஓட்டுநரை போலியான போலிசார் காரில் அழைத்து சென்று அவர்கள் கொண்டுவந்திருந்த 780000 ரூபாயையும், அவர்களின் கைப்பேசி அணிந்திருந்த நகை உள்ளிட்டவைகளை பெற்றுக்கொண்டு மாநில எல்லையான வனப்பகுதியில் விட்டு சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுக்குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலிசார் தேடி வந்தநிலையில் போலியான போலிஸ் வாகனம் பேரிகைக்கு வந்தபோது வாகன எண்ணை வைத்து பேரிகை போலிசார் 6 பேரை அதிரடியாக கைது செய்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் பிரகாஷ் என்பவரின் உண்மையான பெயர் இப்ராஹிம் என்பதும் அவர் டிஎஸ்பி, ஐடி அதிகாரி வேடங்களில் ஏமாற்றி வருவது தெரியவந்தது

பிரகாஷ், பாபு, சக்திவேல், கண்ணன், மன்சூர், மதன்செட்டி ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்