சிம்பு மீது புகார்; ஞானவேல் ராஜா மறுப்பு

  • In Cinema
  • October 9, 2019
  • 197 Views
சிம்பு மீது புகார்; ஞானவேல் ராஜா மறுப்பு

சென்னை:

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிம்பு மீது புகாரளிக்கவில்¬லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஞானவேல் ராஜா படத்தில் நடிகர் சிம்பு ஒப்பந்தமாகி, பின்னர் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அந்த செய்திக்கு ஞானவேல் ராஜா தற்போது மறுப்பு தெரிவித்து கூறுகையில், நடிகர் சிம்பு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவில்லை. ‘மஃப்டி’ படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லை என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்