ராகுல்காந்திக்கு மொழிபெயர்த்த சிறுமி

ராகுல்காந்திக்கு மொழிபெயர்த்த சிறுமி

வயநாடு:

கேரள பள்ளியில் சிறுமி ஒருவர் ராகுல்காந்தியின் பேச்சை மொழிபெயர்த்து கூறியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் அறிவியல் ஆய்வகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திறந்து வைத்தார்.

அப்போது ஆங்கிலத்தில் பேசிய ராகுல்காந்தி, வழக்கமாக மொழிபெயர்ப்பைவிட, மாணவிகள் யாரேனும் மொழிபெயர்ப்பு செய்ய முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு 12ம் வகுப்பு படிக்கும் சஃபா செபின் உடனே எழுந்து நான் மொழிபெயர்ப்பு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி ஆங்கிலத்தில் பேசியதை தங்குதடையின்றி அழகாக மலையாளத்தில் மொழிபெயர்த்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோரும் அந்த மாணவியை பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்வு வைரலாக பரவியதால் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்