காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சு; கதறிய இளைஞர்

காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சு; கதறிய இளைஞர்

கட்டாக்:

ஒடிசாவில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிசா மாநிலம், கட்டாக் அருகே ஜகட்புரை சேர்ந்த அலேக் பரிக், பக்ரி சஹி என்ற இளம்பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, காதலிக்க அலேக்பரிக் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அவர் மீது ஆசிட் வீசியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதறிய இளைஞரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அலேக் பரிக் விசாரித்தபோது, தன்னை அந்த பெண் காதலித்ததாகவும், தனக்கு அவர் மீது காதல் இல்ல என்றதால் ஆத்திரத்தில் ஆசிட் வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்