ரூ.33க்கு 2 வருடம் போராடி பெற்ற வாலிபர்!

ரூ.33க்கு 2 வருடம் போராடி பெற்ற வாலிபர்!

ஜெய்ப்பூர்:

ரயில்வே துறையிடமிருந்து, ரூ.33 திரும்பப்பெற (ரீபண்டு) 2 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, வாலிபர் திரும்ப பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் இருந்து டெல்லி செல்வதற்காக, சுஜீத் சுவாமி என்ற பொறியாளர் ஒருவர், கடந்த ஆண்டு ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். பின்னர், தவிர்க்க முடியாத காரணங்களால் முன்பதிவு செய்த டிக்கெட்டை சுஜீத் சுவாமி ரத்து செய்துவிட்டார்.

இதில் முன்பதிவு செய்த ரூ.765 டிக்கெட் பணத்தில் ரூ.65 பிடித்தம் போக மீதம் உள்ள ரூ.700 பதிலாக ரூ.33 குறைவாக சுஜீத் சுவாமிக்கு ரீபண்டு கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மீதம் உள்ள ரூ.33க்கு விளக்கம் கேட்டு ரயில்வே துறைக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த ரயில்வே நிர்வாகம், ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து, ஜிஎஸ்டிக்கு பின் ரத்து செய்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 2 ஆண்டு போராட்டத்துக்கு பின்னர் ரூ.33 பணத்தை சுஜித் குமாரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்