5000 டன் டேங்குகள்.. லாக்டவுனால் வந்த வினை.. விசாகப்பட்டினம் விஷ வாயு விபத்துக்கு இப்படி ஒரு காரணமா?

5000 டன் டேங்குகள்.. லாக்டவுனால் வந்த வினை.. விசாகப்பட்டினம் விஷ வாயு விபத்துக்கு இப்படி ஒரு காரணமா?

விசாகப்பட்டினத்தில் இன்று ஏற்பட்ட விஷவாயு விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது

இன்று அதிகாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் விஷவாயு விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது.

இந்த விஷவாயு கசிவு காரணமாக 8 பேர் பலியாகி உள்ளனர். 5000க்கும் அதிகமானோர் சுயநினைவை இழந்து மொத்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். ஸ்டைரீன் (styrene) என்ற வாயு கசிவு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.என்ன காரணம்
இந்த நிலையில் இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது இது தொடர்பாக முக்கியமான தகவல்கள் மற்றும் விஷயங்கள் வெளியாகி வருகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது என்று விசாகப்பட்டினம் மேற்கு பகுதிக்கான துணை கமிஷ்னர் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த தொழிற்சாலையில் இரண்டு பெரிய டேங்குகள் இருந்துள்ளது. இதில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.

டேங்குகள்
இரண்டு டேங்குகள்

அதில் ஒரு டேங்க் 5000 டன் கொண்டது. இந்த இதில்தான் மோசமான ஸ்டைரீன் (styrene) எனப்படும் வாயு இருந்துள்ளது. இதில் குளிர் நிலையில் இத்தனை நாட்கள் வைத்துள்ளனர். மார்ச் 24ம் தேதிக்கு பிறகு இதை திறக்கவே இல்லை. இதை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். லாக் டவுன் முழுக்க இதை யாருமே பராமரிக்கவில்லை. இன்று காலை இதை மீண்டும் இயக்கி உள்ளனர்.

லாக்டவுன்
லாக்டவுன் காரணம்

ஆனால் இத்தனை நாட்கள் இந்த வாயு உள்ளேயே பராமரிப்பு இன்றி இருந்துள்ளது. இதனால் அதில் கெமிக்கல் வினை ஏற்பட்டு, அந்த வாயுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளே டேங்கிற்குள் பெரிய அளவில் வெப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த டேங்கை இன்று அதிகாலை இயக்க முற்பட்ட போது அது மொத்தமாக வெடித்து சிதறியது. இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, இதை பற்றி மேலும் விசாரித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கசிவு
லேசான கசிவு

முதலில் இங்கு இந்த வெடிப்பு ஏற்படும் முன் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது. அழுத்தம் காரணமாக ஸ்டைரீன் (styrene) வெளியே வர முயன்று, கசிவு ஏற்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்த முயன்று இருக்கிறார்கள். இதனால் அழுத்தம் இன்னும் அதிகம் ஆகியுள்ளது. இதனால் வெடிப்பு ஏற்பட்டு, மொத்தமாக வாயு வெளியே வந்து இருக்கலாம். லாக்டவுன் காரணமாக பராமரிப்பு செய்யப்படாததே காரணம் என்கிறார்கள்.

பணியாளர்கள்
பணியாளர்கள் நிலை

இந்த விபத்து ஏற்பட்ட போது, அந்த தொழிற்சாலைக்குள் சில பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால் இவர்களின் நிலை என்ன, இவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதனால் பலர் கோமாவிற்கு சென்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு தீவிரமான மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்