பேரிடர் மீட்புக்குழுவுக்கு ரூ.30.27 கோடி

பேரிடர் மீட்புக்குழுவுக்கு ரூ.30.27 கோடி

சென்னை:

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை வலுப்படுத்த கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கருவிகளுக்காக ரூ.30.27 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பேரிடர் காலங்களில் மீட்பு குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை வலுப்படுத்த கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கருவிகளுக்காக, சென்னை மாநகராட்சிக்கு ரூ.7.25 கோடியும், மீன்வளத்துறைக்கு ரூ.1 கோடியும், மொத்தம் ரூ.38.52 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்