இலவச ஆடு; 133 பேருக்கு தலா ரூ.10,000

இலவச ஆடு; 133 பேருக்கு தலா ரூ.10,000

இண்டூர்:

தர்மபுரி மாவட்டத்தில் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில், 133 பேருக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.

தமிழக அரசு ஏழை எளியோர்கள் முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டம். இத்திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி ஒன்றியம் கோனங்கிஅள்ளி பஞ்சாயத்தில் 133 பயனாளிகளுக்கு வெள்ளாடு வாங்குவதற்கு தலா ரூ.10,000 மற்றும் வாடகைக்காக 150 ரூபாயும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கால்நடை அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்தது. இண்டூர் கால்நடை மருத்துவர் தசரதன் மற்றும் பண்டஅள்ளி கால்நடை மருத்துவர் அருண் ஆனந்த் ஆகியோர் பயனாளிகளின் ஆடுகளை பரிசோதனை செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்