150வது ‘காந்தி ஜெயந்தி’; 150 பேருக்கு ‘ஹெல்மெட்’

150வது ‘காந்தி ஜெயந்தி’; 150 பேருக்கு ‘ஹெல்மெட்’

ஒசூர்:

ஒசூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 150 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கர்நாடக எல்லையில் தமிழகத்திற்கு நுழையும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தோருக்கு, தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் 150 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுக்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சீனிவாச ரெட்டி கூறுகையில், ஆயிரக்கணக்கான ரூபாய்களில் வாகனங்களை வாங்கி ஓட்டி செல்லும் நாம், உயிரைக்காக்க கூடிய தலைக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டுமென்கிற விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு ஏற்ப்படுத்த வேண்டுமென்கிற நோக்கத்தில், 150வது காந்தி பிறந்த நாளில் 150 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதாக சீனிவாச ரெட்டி தெரிவித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஓசூர் சிப்காட் போலீசாரும் பங்கேற்றிருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்