மெட்ரோ ரயில், பஸ்சில் இனி பெண்களுக்கு இலவசம்..! அர்விந் கேஜ்ரிவால் அதிரடி..!!

மெட்ரோ ரயில், பஸ்சில் இனி பெண்களுக்கு இலவசம்..! அர்விந் கேஜ்ரிவால் அதிரடி..!!

புதுடெல்லி:

டெல்லி மாநகரப்பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் இனி பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ‘‘மகளிர் பாதுகாப்புக்கு ஆம் ஆத்மி கட்சி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், டெல்லி மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படும். அனைத்து மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

இதன் மூலம் அதிக கட்டண பேருந்துகளிலும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என அர்விந்த் கேஜிரிவால் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்