5 கிராமத்தினருக்கு இலவச பசு மாடுகள்

5 கிராமத்தினருக்கு இலவச பசு மாடுகள்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா பாலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கூரம்பட்டி, மேல்குள்ளம்பட்டி, சவுளூர், பையூரான்கொட்டாய், கானாப்பட்டி கிராமங்களை சேர்ந்த 50 பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்பட்டது.

இந்த கறவை மாடுகள் வாங்குவதற்கு தலா ரூ.37500 ஒருவர் வீதம் 50 பயனாளிகளுக்கு 18, லட்சத்து 75,000 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராஜேந்திரன், மற்றும் துணை இயக்குநர் வேடியப்பன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இவர்களுடன் கால்நடை மருத்துவர்கள் தசரதன், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏழைகள் மேம்படுவதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக கறவை மாடுகள் வாங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் துவக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்