4வது சுற்றுவட்டபாதையில் ‘சந்திராயன்2’

4வது சுற்றுவட்டபாதையில் ‘சந்திராயன்2’

பெங்களூரு:

இஸ்ரோ அனுப்பிய ‘சந்திராயன் -2’ விண்கலம் தற்போது நிலவுக்கு அருகில் உள்ள 4வது சுற்றுவட்டப்பாதைக்கு நெருங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 22ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ‘சந்திராயன்2’ விண்கலத்தை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தியது. சுமார் 3 லட்சத்து 84 ஆயயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள நிலவுக்கு செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி இந்த விண்கலம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நிலவுக்கு அருகில் 4வது சுற்றுவட்டப்பாதையில் இந்திய நேரப்படி மாலை 3.27 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனவும், வரும் 6ம் தேதி கடைசி சுற்றுவட்டப்பாதையில் ‘சந்திராயன் 2’ நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோவின் பெங்களூரு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்