1500 ஆண்டு கற்சிலை கண்டெடுப்பு!

1500 ஆண்டு கற்சிலை கண்டெடுப்பு!

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே சுமார் 1500 ஆண்டுகால கற்சிலை ஒன்று பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த தி.வலசையில் உள்ள துரிஞ்சல் ஆற்றின் அருகில் விவசாய நிலத்தை சுத்தம்செய்யும்போது பூமிக்கு அடியில் இருந்து கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

தகவலின் பேரில், ங்க விரைந்த மாவட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் முருகன் மற்றும் விநாயகர் சிலைகளை கண்டெடுத்தனர். இந்த சிலைகள் அரியவகை கற்சிலைகள் என்றும் சுமார் 1500 ஆண்டுகாலத்துக்கு முற்பட்டவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சிலைகள் பல்வர் காலத்து சிலைகளாக இருக்கலாம் என்றும், இதுபோன்ற சிலைகள் எங்குமே கிடையாது என்றும் தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்