வனவரை தாக்கிய பொதுமக்கள்

வனவரை தாக்கிய பொதுமக்கள்

ஒசூர்:

ஓசூர் அருகே காட்டுயானை தாக்கி 80 வயது மூதாட்டி பலியான சம்பவத்தால், காட்டுயானையை விரட்ட சென்ற வனவரை பொதுமக்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடேதூக்கம் வனப்பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வந்துள்ளன. இந்த காட்டுயானைகள் உணவு தேடி சானமாவு, போடூர், ரமபுரம், பாத்தகோட்டா உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் சுற்றித்திரிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகளில் பிரிந்த 9க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் இன்று அதிகாலை ஓசூர் அருகேயுள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தின் அருகே சுற்றிதிரிந்துள்ளது அதிகாலை நேரத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமியம்மா என்பவர் தனது பேத்தி திவ்யா என்பவருடன் காலைக்கடன் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியில் சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த காட்டுயானை கூட்டத்தில் பிரிந்த ஒரு ஒற்றை காட்டுயானை வெங்கடலட்சுமியம்மாவையும் திவ்யாவையும் தூரத்தி உள்ளது இதில் திவ்யா அங்கிருந்து தப்பித்து ஓடிவிடவே வெங்கடலட்சுமியம்மாவை காட்டுயானை துரத்தி சென்று மிதித்துக் கொன்றது இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த கிராமமக்கள் உடனடியாக ஓசூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குடிசாதனப்பள்ளி கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

இதனிடையே ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் காட்டுயானைகளை இரவு நேரத்தில் விரட்ட சென்ற வனத்துறையினரை அங்குள்ள பொதுமக்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனவர் ராகுல் என்பவரை சிலர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர் படுகாயமடைந்த அவர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வனத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் உத்தனப்பள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்