பாக்தாதியை கொன்ற வீடியோ வெளியீடு

  • In General
  • October 31, 2019
  • 176 Views
பாக்தாதியை கொன்ற வீடியோ வெளியீடு

வாஷிங்டன்:

சிரியாவில் பதுங்கியிருந்த ஐஎஸ்., தீவிரவாத இயக்க தலைவர் பாக்தாதியை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகள பென்டகன் வெளியிட்டுள்ளது.

சிரியாவில் பதுங்கியிருந்த ஐஎஸ்., தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி மீது அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது, தப்பிக்க முடியாமல் பாக்தாதி உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அவரின் உடலை அமெரிக்க ராணுவம் கடலில் தூக்கி வீசியது.

இந்நிலையில், பாக்தாதி கொல்லப்பட்ட வீடியோவை பென்டகன் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் சென்று, பாக்தாதி பதுங்கியிருந்த கட்டிடத்திற்குள் அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்