மகா.,வில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

மகா.,வில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

புதுடெல்லி:

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆதரவு அளித்த நிலையில், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து தங்களிடம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருப்பதாக சிவசேனாவும், தேசியவாத காங்கிரசின் சரத் பவார் மற்றும் காங்கிரசார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவும், ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை எனவும் பா.ஜ., தலைமையிலான அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்