விமானம் டிக்கெட் விலை வீழ்ச்சி.. பயணிகள் மகிழ்ச்சி

விமானம் டிக்கெட் விலை வீழ்ச்சி.. பயணிகள் மகிழ்ச்சி

டெல்லி:

எரிபொருள் விலை குறைவாகவும், புதிய விமானங்கள் வரத்தாலும் கடைசி நிமிட விற்பனை காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை, பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன.

மலிவான எரி பொருள் விலை காரணமாக, விமான டிக்கெட்களின் விலை மிக குறைந்துள்ளதாக, போக்குவரத்து சம்பந்தமான ஆன்லைன் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் புதிய விமானங்கள், மற்றும் கடைசி நிமிட விற்பனை மற்றும் பாகிஸ்தான் தன்னுடைய நாட்டு வான்வெளியை திறந்து விட்டுள்ளது.

இதனால் விமானம் செல்லும் தூரத்தின் எரிபொருள் குறைவாக உள்ளது. இதன் காரணமாகவும் விலை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சராசரியாக உள்நாட்டு ஒரு வழித்தடங்களின் கட்டணம், முந்தைய ஆண்டை விட ஒப்பிடும்போது தற்போது 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆன்லைன் தளம் வெளியிட்டுள்ளது.

இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்