பெங்களூரு விமான நிலையத்தில் மயங்கி விழுந்து விமானப் பயணி உயிரிழப்பு

பெங்களூரு விமான நிலையத்தில் மயங்கி விழுந்து விமானப் பயணி உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கேம்பகௌடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இரண்டு மணி நேரத்தில் விசாகப்பட்டினம் புறப்படும் ஏர் ஏசியா விமானத்தில் செல்ல வேண்டிய நிலையில், கழிவறைக்குச் சென்ற இளைஞர், திடீரென மயங்கி விழுந்தார். அவரை ஊழியர் பரிசோதித்ததில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. அவர் அரேபள்ளி மாருதி கணேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு, நடைமுறைகள் முடிந்து விமானத்தில் ஏற தயாராக இருக்கும் பகுதியில் அமர்ந்திருந்த கணேஷ், கழிவறைக்குச் சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுக்குப் பிறகே அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனியாக விமான நிலையத்துக்கு வந்ததும், அவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவுகள் இரண்டு நாள்களுக்குப் பிறகே தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்