ஒசூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அச்சம்

ஒசூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே அனாச்சந்திரம் கிராமத்தில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது “துரை ஏரி”,

சூளகிரி பகுதியிலேயே மிகப்பெரிய ஏரியாக உள்ள துரை ஏரி, சூளகிரி, அனாச்சந்திரம், ஒட்டர்பாளையம், மருதாண்டப்பள்ளி ஆகிய அப்பகுதியினருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளதால் தென்பெண்ணை ஆற்று நீரை கொண்டு துரை ஏரியை நிரப்ப வேண்டுமென்பது சுற்றுபகுதி கிராம மக்களின் கோரிக்கையாக இருந்த நிலையில்,

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு முதல் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆறு வழியாக நீர் வந்துக்கொண்டிருக்கிறது

இந்தநிலையில் திடீரென ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கும் சம்பவத்தால் சூளகிரி, அனாச்சந்திரம், ஒட்டர்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆற்றுநீர் ஏரியில் கலந்ததாலேயே மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கும் நிலையில் ஆற்றுநீரில் இரசாயனம் ஏதேனும் கலந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காராணமா என்பதை பொதுப்பணி மற்றும் மீன்வளத்துறையினர் பரிசோதித்து தெளிவுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்