கன்னட ஊடகம் மீது வழக்குப்பதிவு..! குமாரசாமியின் கவுண்டவுன் ஆரம்பம்..!!

கன்னட ஊடகம் மீது வழக்குப்பதிவு..! குமாரசாமியின் கவுண்டவுன் ஆரம்பம்..!!

பெங்களூரு:

கன்னட தினசரி நாளிதழின் ஆசிரியர் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மைசூரில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, அரசியல்வாதிகள் வேலையில்லாதவர்கள் என்று ஊடகங்கள் நினைத்துக்கொண்டுள்ளதா எனவும், அவர்களை கேலி, கிண்டல் செய்வதற்கும், சிறுமைப்படுத்துவதற்கும் ஊடகங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், தனது அரசு கவிழ்ந்துவிடும் என ஊடகங்கள் கூறிவருவதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஊடகங்களின் தயவால் தான் ஆட்சியில் இல்லை. இத்தகைய ஊடகங்களின் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ம.ஜ.த தலைவர் கொடுத்த புகாரின் பேரில், குமாரசாமியின் மகன் நிகில் தொடர்பாக அவதூறாக செய்தி வெளியிட்டதாகக்கூறி, கன்னட தினசரி நாளிதழான விஸ்வவாணி ஆசிரியர் விஸ்வேஷ்வர் பட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்செயல், கர்நாடக ஊடகங்கள் மீது குமாரசாமியின் பழிவாங்கும் நோக்கமாக தன்னுடைய கவுண்டவுனை காட்டுகிறது என கர்நாடக ஊடகங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்