தாஜ்மஹாலுக்குள் 3 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் அபராதம்!

தாஜ்மஹாலுக்குள் 3 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் அபராதம்!

ஆக்ரா:

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்குள் சுற்றுலாப் பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலில் சமீபத்தில் டெர்ன்ஸ்டைல் கேட்டுகள் பொறுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் உள்ளே வருவது மற்றும் வெளியே செல்லும் நேரமும் பதிவாகிறது.

நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துக்கு பதிலாக சுற்றுலாப் பயணிகள் தாமதமாக வந்தால் அனுமதி மறுக்கம்படுகிறது. அப்படி வரும் பட்சத்தில் புதிய நுழைவு சீட்டு வாங்கிய பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், தாஜ் மகாலுக்குள் 3 மணி நேரத்துக்கு மேல் சுற்றுலா பயணிகள் இருந்தால், டிக்கெட் விலையே அபராதமாக விதிக்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்