இன்று முதல் அமலாகிறது பிளாஸ்டிக்கு அபராதம்..!

இன்று முதல் அமலாகிறது பிளாஸ்டிக்கு அபராதம்..!

சென்னை:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு நேரடி அபராதம் விதிக்கும் முறை இன்று முதல் அமலாகிறது.

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோருக்கு அபராதமும் விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்லையில், இந்த நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை சேமிப்பது, விற்பது, கொண்டுசெல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையும், நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையும், சிறு வியாபாரிகளுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் எனவும், 4வது முறையாக சிக்கும்பட்சத்தில் உரிமம் ரத்துசெய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்