விவசாயிகளுக்கு பென்சன் திட்டம்

விவசாயிகளுக்கு பென்சன் திட்டம்

ராஞ்சி:
சிறு, குறு விவசாயிகள் 60 வயது ஆன போது, அவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019- 20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.

இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

இந்த திட்டத்துக்கு “பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இன்று ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்றது.

விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயனடைவார்கள் என்று கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்