செல்பி எடுக்கும்போது நடிகைக்கு முத்தம்

  • In Cinema
  • January 10, 2020
  • 199 Views
செல்பி எடுக்கும்போது நடிகைக்கு முத்தம்

சென்னை:

ரசிகர் ஒருவர் செல்பி எடுக்கும்போது, பாலிவுட் நடிகை சாரா அலிகானுக்கு முத்தம் கொடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் நடிகை சாரா அலி கான். பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான இவர், ‘கேதர்நாத்’ மற்றும் ‘சிம்பா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் பெரும் வெற்றியை தேடித்தந்தது. தற்போது சாரா அலிகானின் நடிப்பில் ‘கூலி நம்பர் 1’ என்ற படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகை சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, ரசிகர் ஒருவர் திடீரென சாரா அலிகானின் கையை பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். சுதரித்துக்கொண்ட சாரா அலிகான், தன்னுடைய பாதுகாவலரை அழைத்து அந்த நபரை தடுத்து கூட்டிச்சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்