காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய ஆசை.. பா.ஜ.க., எம்.எல்.ஏ.,

காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய ஆசை.. பா.ஜ.க., எம்.எல்.ஏ.,

முஷாபர்நகர் :
காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதால் கட்சி தொண்டர்கள் ஆர்வமாக உள்ளதாக உத்திர பிரதேச பா.ஜ., எம்.எல்.ஏ., விக்ரம் சிங் சைனி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டத்தை மத்திய அரசு நீக்கியது. இதனை கொண்டாடும் விதமாக உ.பி. பாஜக சார்பில் முஷாபர்நகரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எம்எல்ஏ., விக்ரம் சிங், காஷ்மீர் பெண்களை இனி திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதால் கட்சியில் திருமணம் ஆகாமல் இருக்கும் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தற்போது எந்த பிரச்னையும் இல்லை. இதற்கு முன் பெண்கள் மீது ஏரளாமான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.

காஷ்மீரை சேர்ந்த பெண் ஒருவர் உ.பி.,யை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவரின் குடியுரிமை பறிக்கப்படும்.

இந்திய குடியுரிமையில் இருந்து காஷ்மீர் குடியுரிமை மாறுபட்டு இருக்கும். தற்போது இந்த தடைகள் நீக்கப்பட்டதால் கட்சியில் உள்ள இஸ்லாமிய தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

காஷ்மீரில் உள்ள வெள்ளையான பெண்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதால் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்து, முஸ்லிம் என ஒவ்வொருவரும் கொண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்த நாடே இதனை கொண்டாடி வருகிறது என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்