அரசு மருத்துவமனையில் காலாவதி மாத்திரைகள்

அரசு மருத்துவமனையில் காலாவதி மாத்திரைகள்

ஒசூர்:

ஓசூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் காலாவதியான மாத்திரைகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த காமன்தொட்டி என்னும் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் புக்கசாகரம்,கோனேரிப்பள்ளி,பேரண்டப்பள்ளி உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு அக்டோபர் மாதம் காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுக்குறித்து சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அளித்த பேட்டியில்:
கடந்த 15 நாட்களாக நோயாளிகளுக்கு மருத்துவர் ஊசிபோடாமல் இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களை செவிலியர்கள் எரிச்சலுடன் நடத்துவதாகவும் அக்டோபர் மாதமே காலாவதியான மாத்திரிக்கைகளை வழங்கி வருவதாக குற்றம்சாட்டினர்.

மேலும் பேசிய பொதுமக்கள் அஜாக்ரதையாக நடக்கும் மருத்துவர்,செவிலியர்கள் மீது சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்